Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…? பொதுமக்கள் அளித்த தகவல்…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் சந்தன மரத்தை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அதிசால் பகுதியில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் சந்தன மரத்தை வெட்டியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ஆட்கள் வர தொடங்கியதால் மர்மநபர்கள் சந்தன மரத்தை வெட்டும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் சந்தன மரம் வெட்டப்பட்டு கிடப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சேரம்பாடி வனச்சரகர் ஆனந்த குமார் தலைமையில் வனத்துறையினர் பாதியில் விட்ட மரத்தை முழுமையாக வெட்டி சரக்கு வாகனம் மூலம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தன மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |