Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தார் சாலை அமைக்கும் பணி…. 3 இடங்களில் வச்சிருக்கோம்…. ஊராட்சிமன்ற தலைவரின் தகவல்….!!

பெருங்குடி ஊராட்சி சார்பாக தார் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஊராட்சி சார்பாக வடக்குத்தெரு, கீழ படுகை, மில் தெரு, அனக்குடி சுடுகாடு போன்ற பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 350 மீட்டர் தூரத்திற்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மண் சாலைகள் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. மேலும் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பராமரிப்பு பழுது நீக்கம், விரிவாக்கம் போன்றவை நடைபெற்றுள்ளது.

அதன்பின் பெருங்குடி ஊராட்சியில் 80 பயனாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவசமாக ஆடுகளும், 35 பயனாளிகளுக்கும் இலவசமாக கோழிகளும் கொடுக்கப்பட்டுள்ளது .இதனைத்தொடர்ந்து 7 பயனாளிகளுக்கு ஆடு, மாடு வளர்ப்பதற்கான பாதுகாப்பு கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பெருங்குடி கிராமத்தில் 3 இடத்தில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று ஊராட்சிமன்ற தலைவர் மேரி சுகுணாவதி பிரபு தெரிவித்துள்ளார்

Categories

Tech |