தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக தொடங்கிய சிறு, குறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும் போது வைப்பு தொகை வைக்கத் தேவையில்லை. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனத்துக்கு முன் அனுபவம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.