விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா_வில் போலி டிக்கெட் மோசடி நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர்.நடிகர் விஜய்யின் ஏராளமான ரசிகர்களும் வந்திருந்தனர். மேலும் முன்னதாகவே டிக்கெட் பூக் செய்தும் , டிக்கெட் பெற்றும் உள்ளே அனுமதி வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
https://twitter.com/VMI_TamilNadu5/status/1174919855771795458
இதனால் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வளாகத்தில் ரசிகர் கூட்டம் அலை மோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க காவல்துறை லேசான தடியடி நடத்தியது.மேலும் இந்த விழாவில் பேசிய விஜய் அரசியல் கருத்துக்களை முன்வைத்ததோடு , பேனரால் இறந்த சுபஸ்ரீ போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க , சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆடியோ லாஞ்ச்ன்னு பேர்ல VMI ஆளுங்கள வச்சி ரவுடிசம் பண்ணிட்டு இருக்காங்க விஜய் ரசிகர்கள்..டிக்கெட் கலர் ஜெராக்ஸ் எடுத்து வித்துருக்கானுங்க😂..கார் கண்ணாடியை ஓடச்சா போலீஸ் அடிக்காம கொஞ்சுவாங்களா டா தேவாங்கு.#அய்யோஅம்மாஆடியோலான்ச்#Viswasam#தலசாம்ராஜ்யம்
pic.twitter.com/dF6iZ68poB— TVK AKS 🫣 (@itz_aks) September 20, 2019
நடிகர் விஜயின் வேண்டுகோளை ஏற்ற ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹாஷ்டாக் போட்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.இந்த ஹாஷ்டாக் ட்வீட்_டரில் இந்தியளவில் ட்ரெண்டிங்_கில் சென்று கொண்டு இருந்த வேளையில் தீடிரென #அய்யோஅம்மாஆடியோலான்ச் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகியது. அதில் விஜய்யின் பிகில் பட இசை வெளியீட்டு விழா_வுக்கு டிக்கெட் எடுத்தும் இடம் கிடைக்கவில்லை , குறைந்த இருக்கைகளை வைத்துக் கொண்டு அதிக டிக்கெட் விற்பனை செய்து மோசடி செய்வதோடு . டிக்கெட் கலர் ஜெராக்ஸ் போட்டு விற்கிறார்கள் என்று பல ரசிகர்கள் டிக்கெட்டை காட்டி தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
https://twitter.com/Nishma_darlz/status/1174913152711979009
மேலும் டிக்கெட்டை கிழித்தெறிவது போலவும் , நாங்கள் வெளிநாட்டில் இருந்து டிக்கெட் வாங்கி வந்துள்ளோம் , உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள் , இனி ஒரு போதும் பங்கேற்க மாட்டோம். குறைந்த இருக்கைக்கு அதிகமாக வசூல் செய்து மோசடி செய்துள்ளனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டும் வீடியோ_வும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஹாஷ்டாக் இந்தியளவில் 12-ஆவது இடத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா_வில் ரசிகர்கள் சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க என்று விஜய் கூறிய விழாவுக்கு எதிராக தற்போது#அய்யோஅம்மாஆடியோலான்ச் என்ற ஹாஷ்டாக் போடப்பட்டு வருகின்றது. இது விஜய் ரசிகர்களுக்கு வேதனை அளிக்கக் கூடியதாக இருந்தாலும் இந்த ஹாஷ்டாக்_கில் கருத்து பதிவிடும் அதிகமானோர் அஜித் ரசிகர்களாகவே உள்ளனர்.எனவே இது அதிக டிக்கெட் வழங்கி முறைகேடு செய்ததற்கு எதிரான ஹாஷ்டாக்கா ? அல்ல விஜய்க்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் பதிவிடும் ஹாஸ்டாக்கா ? என்று அவரவர் ரசிகர்களுக்கு தான் தெரிவும்.