தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டம் தீட்டியுள்ளதாகவும், திருக்கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதலமைச்சர் புதிய திட்டம் அறிவிப்பார் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.