தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின் நுகர்வோர் களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்த நுகர்வோர்கள் அவர்களுடைய மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை தாங்களே தங்கள் செல்போன் மூலம் அறிந்து கொள்ள வழி செய்திட வேண்டும். மேலும் மின் நுகர்வோரின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும் திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.