Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”சென்செக்ஸ் 2,000 உயர்வு” குதூகலத்தில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்ந்து 10 ஆண்டுகளாக இல்லாத புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு அரசு வரிச்சலுகை அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குசந்தை குறியீட்டுஎண் அதிகரித்து வருகின்றது. தற்போதைய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2,006 புள்ளிகள் அதிகரித்து 38,100 _க்கும் ,தேசிய பங்குச்சந்தையான நிப்டி 589 புள்ளிகள் உயர்ந்து 11,294_க்கு வர்த்தகமாகி கொண்டு  இருக்கின்றது. சென்செக்ஸ் 2006 உயர்வு முதலீட்டாளர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

Categories

Tech |