சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நேற்று நடிகர் விஜய் பேசியதை தொடர்ந்து இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரணச்செய்தி கேட்பதுதான். சுப ஸ்ரீயின் மரணச்செய்தியும் அப்படிப்பட்டதுதான். தன்னுடைய ரத்தம் சிந்திக் கிடப்பதை பார்க்கும் பொழுது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல. எல்லாருடைய மனதிலும் திகிலும் மரணம் வழியும் கண்டிப்பாக வந்திருக்கும். பெண் பிள்ளைகளை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
அரசாங்கத்தின் அசட்டுத்தனமான அலட்சியத்தால் ரகு சுப ஸ்ரீ என ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது அறிவு வேணாம், எங்க பேனர் வைக்கனும் வைக்க கூடாது என்று, இவர்களை போன்ற அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகிறதோ? எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும் தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பதும் தான் இவர்களுக்குத் தெரிந்த அரசியல். இவங்கள போல உள்ள ஆளுங்க மேல எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை, மரியாதையும் இல்லை.
ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் எனது கையை பிடித்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதி மையம் உங்கள் சார்பாக அந்த தவறுகளை தட்டிக் கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும். எங்களை ஆள்பவர்களை நாங்கள் தான் தேர்வு செய்வோம் ஆனால் நாங்கள் காலம் முழுவதும் அவர்களுக்கு அடிமையாகத்தான் இருப்போம் என்று கூறினால் அதைவிட பைத்தியக்காரத்தனம் எதுவுமே கிடையாது. உங்களை சாதாரண மக்கள் சாதாரண மக்கள் என்று சொல்லிச் சொல்லியே அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள்தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் திடமாக நம்புகிறேன். வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம் புதிய தலைமையை உருவாக்குவோம் நாளை நமதே.
தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக
மாற வேண்டும். pic.twitter.com/RQgaiORiHc— Kamal Haasan (@ikamalhaasan) September 20, 2019