தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதில் 12-ம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் கட்டாயம் பங்குபற்றிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதி படிப்பு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு எழுத முடியாது எனவும் அறிவித்துள்ளது. எனவே தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.