Categories
மாநில செய்திகள்

கே.எஸ்.அழகிரி தலைமையில்… காங்கிரஸ் கண்டன பேரணி…!!!

இன்று காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் வேவு பார்க்கப்பட்டது, குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கமிட்டி கண்டன பேரணி நடத்தியது.

இந்தப் பேரணி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலரும் பங்கேற்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

Categories

Tech |