Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்..! செல்வாக்கு அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். உதவிகள் கிடைக்கும். தலைப்பட்ட காரியங்களில் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

செல்வாக்கு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். குடும்பத்திலிருந்த மனக்கசப்புகள் நீங்கும். உடன்பிறந்தோர்க்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். காதலியே உள்ளவர்கள் பக்கபலமாக நடக்க வேண்டும். காதல் கைக்கூடும் நாளாக இருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. கல்வியில் எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சக மாணவர்களுக்கு உதவி செய்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர்நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |