Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. வசமா மாட்டிய வாலிபர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக தென்காசி மாவட்டம் உமையதலைவன் பட்டியைச் சேர்ந்த சீனிபாண்டி என்பவரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் சீனிபாண்டி மீது விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டத்திலும் ரேஷன் அரிசி கடத்திய வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சீனிபாண்டியை மதுரை உணவு கடத்தல் தடுப்புபபிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி விருதுநகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பின் கலெக்டர் உத்தரவின்படி உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் சீனிபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |