Categories
உலக செய்திகள்

என்ன…! கொரோனா டெல்டாவின் மற்றொரு மாறுபாடா…? தொற்றை முற்றிலும் அழிக்க முடியாது…. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனாவை முற்றிலும் அழிப்பதென்பது முடியாத காரியம் என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார். மேலும் இவர் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம் என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கயிருக்கும் விளையாட்டு வீரர்களில் யாரெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விரைவாக கண்டறிந்து தனிமைப்படுத்தினால் மட்டுமே நோய் பரவலை தடுக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மனிதர்கள் கொரோனா டெல்டாவின் மற்றொரு மாறுபாட்டை விரைவில் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |