மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுமியின் உடலில் உள்ள உறுப்புகள் 4 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 8ஆம் தேதி திடீர் என்று மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் செரிபரல் ஒய்டிமா எனப்படும் மூளை செயல்பாடு பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் கடந்த 18ஆம் தேதி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர்களிடம் சிறுமியின் உடலில் உள்ள உறுப்புகள் தானமாக வழங்குவது குறித்து மருத்துவர்கள் பேசினார். இதையடுத்து அவர்கள் சம்மதத்துடன் சிறுமியின் இதயம், லிவர், கிட்னி மற்றும் கண் ஆகிய உறுப்புகள் சிறுமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு அதே மருத்துவமனையில் உள்ள வேறு சிலருக்கு பொருத்தப்பட்டது. இதயம் மட்டும் அதே மருத்துவமனையில் பொருத்துவதற்கு நபர் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதயத்தை கொண்டு செல்வதற்கு மருத்துவமனையிலிருந்து விமானம் வழியாக ட்ராபிக் இல்லாமல் ரோடு இருக்கும்படி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது. உரிய நேரத்தில் இதய மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு வேறொருவருக்கு பொருத்தப்பட்டது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்த சிறுமியின் பெயரும் அவரது குடும்பத்தினர் பெயரும் வெளியில் தெரிய வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டதால் வெளியிடப்படவில்லை.