Categories
விளையாட்டு

’நானும் பிராமின் தான்’ – SHOCK கொடுத்த சுரேஷ் ரெய்னா….!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “தான் பிராமணர்” என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியதையடுத்து சமூக ஊடகங்களில் விமர்சித்திற்கு ஆளானார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (டி.என்.பி.எல்) ஐந்தாவது சீசனின் தொடக்க ஆட்டத்தின் போது வர்ணனையில் சேர அழைக்கப்பட்டபோது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரெய்னா இந்த கருத்தை தெரிவித்தார்.

சென்னையில் வேஷ்டி சட்டை, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேட்டபோது, நானும் பிராமின் தான் என நினைக்கிறேன். 2004ஆம் ஆண்டு முதல் சென்னையில் விளையாடி வருகிறேன். எனக்கு இந்த கலாச்சார மிகவும் பிடித்துள்ளது என கூறினார். அவர் தன்னை சாதியுடன் அடையாளப்படுத்திக் கொண்டதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |