தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உலக தமிழ்மாநாடு நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார். செம்மொழி தமிழ் அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டாக நிறுத்தப்பட்ட கருணாநிதி விருது இனி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.