ஜெர்மன் நாட்டில் கனத்த மழை பொழிந்து பெருவெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு, இயற்கை சீற்றம் என்று நாட்டையே புரட்டிப்போட்டது.
ஜெர்மனில் இந்த பேரழிவால் சுமார் 170 நபர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சேதங்களை சந்தித்து நிலை குலைந்து நிற்கும் ஜெர்மனியில் வரும் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாட்டுமக்கள், ஐரோப்பாவிலேயே பணக்கார நாடு ஜெர்மன் தான். எனினும் வெள்ளத்தை சந்திப்பதில் இவ்வளவு தடுமாற்றம் எதற்காக? என்று தங்கள் குடும்பத்தாரை இழந்த துக்கம் மற்றும் ஆத்திரத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இதற்கிடையே இன்று மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள், பெடரல் அரசு மற்றும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளத்திலிருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்றே கருத்து தெரிவித்துள்ளார்கள்.