பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கொண்டு திருமண ஆடை ஒன்றை பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தடுப்பு நடவடிக்கைகளில் கிருமி நாசினியும் முக கவசமும் பொதுமக்களின் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. பெரும்பாலும் நாம் அதிக அளவில் முகக் கவசங்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசிவிட்டு செல்கிறோம்.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டாம் சில்வர்வுட் என்ற ஆடை வடிவமைப்பாளர் நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் முகங்களை கொண்டு திருமண ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஆடையை வடிவமைக்க அவர் சுமார் 1500 முக கவசங்களை உபயோகித்துள்ளார்.
மேலும் உடலமைப்பு சீரான வகையில் இருப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பிபிஇ கிட்டை இடுப்பில் பயன்படுத்தி உள்ளார். இதனையடுத்து திருமண ஏற்பாடுகளை செய்து தரும் ஹிச்ட் என்னும் இணையதளம் அமைப்பு இந்த ஆடையை வடிவமைக்க பொருளாதார உதவிகளை செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 கோடி முகக்கவசங்கள் அணியப்பட்டு தூக்கி வீசப்பட்டு உள்ளதாகச் ஹிச்ட் இணையதளம் கூறியுள்ளது.