Categories
உலக செய்திகள்

எந்த ஆதாரமும் இல்ல..! ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தல் விவகாரம்… பிரபல நாடு தகவல்..!!

பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தான் தூதருடைய மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தகுந்த ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் மகள் சில்சிலா அலிகேல் ( 27 ) பாகிஸ்தானில் மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளானதாக தகவல் வெளியானது. அதன் பிறகு சில்சிலா அலிகேலை அந்த கடத்தல் கும்பல் சில மணி நேரங்களில் சாலையில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் தனது மகள் தற்போது நன்றாக இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஆப்கானிஸ்தான் தூதருடைய மகள் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்காக தங்கள் நாட்டு தூதரை ஆப்கானிஸ்தான் திரும்ப அழைக்க கூடாது என்று ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளார்.

Categories

Tech |