Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் போலி முட்டை விற்பனை… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

ஆந்திராவில் கோழிமுட்டையை குறைந்த விலையில் விற்பனை செய்த வியாபாரி மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராமப் பகுதியில் நேற்று மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் ஒன்று சென்றது. அந்த மூட்டைகளை ஏற்றிச் சென்ற வியாபாரி ஊருக்குச் சென்று 30 முட்டைகள் 130 ரூபாய்க்கு என்று கூறி விற்பனை செய்துள்ளார். விலை குறைவாக கிடைக்கிறது என்று எண்ணி அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் டிரே கணக்கில் முட்டைகளை வாங்கி சென்றனர். ஒரு மணி நேரத்தில் வண்டியில் இருந்த அனைத்து முட்டைகளும் விற்று தீர்ந்தது. பின்னர் அந்த வியாபாரி ஊரை விட்டு சென்று விட்டார்.

மூட்டையை வாங்கிச் சென்றவர்கள் வீடுகளில் சென்று சமைக்க தொடங்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிலர் முட்டையை உடைத்து பார்த்தபோது அதில் ஒன்றுமே இல்லை, வெறும் பிளாஸ்டிக் முட்டை போல் இருந்தது. சிலர் முட்டையை வேக வைத்தால் ஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை. சிலர் ஆம்லேட் போடவும் முயற்சித்தனர். ஆனால் முட்டை உடையவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அனைவரும் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முட்டை வியாபாரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |