தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விரைவில் தமிழ் வழியில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய தாய் மொழியில் உயர் கல்வியை உறுதி செய்யும் லட்சியத்தை பாடநூல் கழகம் விரைவில் நிறைவேற்றபடும் என்றும் தெரிவித்துள்ளார்.