சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டுபேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார்.
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்பு நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லபாக்கம் சேதுராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மின்சாரவாரியத்தின் அலட்சிய போக்கு என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன், மற்றும் சிட்லபாக்கம் சேதுராஜ் ஆகிய குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.