Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதல்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புளியடிவிளையில் சுரேஷ் என்பவர் கொத்தனாராக வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இதில் சுரேஷ் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அதிகாலையில் கொல்லத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த அருமனை பொத்தைத்தாணி விளையை சேர்ந்த டேவிட்மணி என்பவர் சுரேசுடன் சென்றுள்ளார். இவர்கள் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக பம்பம் பகுதியில் முன்னால் சென்ற ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகின்றது.

அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்த ஒரு அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுரேஷ் ஸ்கூட்டருடன் பேருந்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் டேவிட் மணி பக்கவாட்டில் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த டேவிட் மணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |