Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில்…. பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தொற்று பரவல் படிப்படியாக குறைந்த பிறகு, மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறைந்த ரக மது வகைகளுக்கு ரூபாய் 10, நடுத்தர ரக மது பானங்களுக்கு ரூபாய் 30, உயர்ரக மது பானங்களுக்கு ரூபாய் 50 உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பீர் விலை ரூபாய் 10 உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மது பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |