மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்கலைகழகம் பெயருக்குத்தான் செயல்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இணைத்து அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைப்பு பல்கலைக்கழகமாக செயல்படும் என சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயருக்குத்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் எந்த பணிகளும் அங்கு நடைபெறவில்லை. எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட கல்லூரிகள் இணைக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.