Categories
உலக செய்திகள்

“வெள்ளம் வரப்போவதை முன்பே கணித்திருக்கலாம்!”.. பிரிட்டன் பெருவெள்ள நிபுணர் வெளியிட்ட தகவல்..!!

ஜெர்மனில் 160 க்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமான வெள்ளம் தொடர்பில் முன்பே கணித்திருக்கலாம் என்று பிரிட்டன் பெருவெள்ள நிபுணர் தெரிவித்திருக்கிறார்.

ரீடிங் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியராக இருக்கும் Hannah Cloke, தான் இதை, முன்பே கணித்திருப்பேன் என்கிறார். மேலும் எச்சரிக்கை தகவல் மக்களிடம் தெரிவிக்கப்படுவதில் தவறு ஏற்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் தங்களுக்கு இவ்வளவு பெரிய  ஆபத்து ஏற்படும் என்று புரிந்திருக்கவில்லை.

இது மாதிரியான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் வெள்ளம் தொடங்கிய பின் வெளியான தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அது ஆபத்தாக இருந்தது. அதிக கவலையை உண்டாக்கக்கூடிய வெள்ளம் வரப்போகிறது என்று தெரிந்ததாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |