Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : பெர்னாண்டோ, அசலங்கா அசத்தல் …. இந்திய அணிக்கு 276 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா-இலங்கை  அணிகளுக்கிடையிலான  2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி  275 ரன்களை குவித்துள்ளது .

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2- வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இன்று நடந்து வருகிறது . இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ – மினோத் பானுகா ஜோடி களமிறங்கினர். இதில் மினோத் பானுகா 36 ரன்களில் ஆட்டமிழக்க  அடுத்து  களமிறங்கிய ராஹபக்க்ஷெ முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த அவிஷ்கா அரை சதம் அடித்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய தனஞ்சய டி செல்வா 32 ரன்களும், சரித் அசலாங்கா 65 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது .இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சஹால் மற்றும்  புவனேஷ்வர் குமார்  தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 276 ரன்களை வெற்றி இலக்காககொண்டு  இந்திய  அணி களமிறங்கியுள்ளது .

Categories

Tech |