Categories
உலக செய்திகள்

வீரர்களுக்கான புதியவகை கட்டில் …. இணையத்தில் வைரலான புகைப்படம் …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா  தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்று  பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடக்க உள்ளது .ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்  மற்ற வீரர்களிடையே  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது  .இதனிடையே  ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு ஆணுறை வழங்கப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த நடைமுறை கடந்த 1988-ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் எய்ட்ஸ் நோய்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில்  இருக்கும் வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கட்டில்கள் அட்டைப் பெட்டிகள் மூலமாக செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதுகுறித்த புகைப்படத்தை அமெரிக்க வீரர் பால் செலிமோ இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான படுக்கைகள் அட்டைப்பெட்டியில் செய்யப்பட்டுள்ளன என்றும், இது விளையாட்டு வீரர்கள்  உடலுறவை தவிர்க்கும் நோக்கத்துடன்  உருவாக்கப்பட்டது என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து  ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன் டோக்கியோ  கிராமத்தில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஆணுறை வழங்கப்படும் என்று ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |