Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கர்ணன்’… எப்போது தெரியுமா?…!!!

தனுஷின் கர்ணன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லால், லட்சுமி பிரியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இதன் பின் மே 14-ஆம் தேதி இந்த படம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்நிலையில் கர்ணன் படத்தின் சேட்லைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் கர்ணன் படம் ஒளிபரப்பாக இருப்பதாக ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |