ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக குறையத்தொடங்கியது. எனவே நாட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியது. எனவே ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணம் தான் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்டிருக்கிறது. அங்கு நேற்று 13 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இம்மாகாணத்தில் கடந்த வாரத்தில் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊரடங்கு இன்று முடிவடையவுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.