பிக்பாஸ் பிரபலம் கவின் அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் கவின் . இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள லிப்ட் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார் .
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கவின் அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ‘ஆகாசவாணி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது . விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.