Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்கள் எங்கே செல்வது… வாலிபரின் செயலால்… சேலத்தில் பரபரப்பு…!!

மனு கொடுக்க சென்ற போது வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல் பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட கலெக்டரிடன் மனு கொடுப்பதற்காக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் சென்றதும் அந்தக் கூட்டத்தில் இருந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலின் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று அந்த வாலிபரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வெள்ளக்கல் பட்டியில் வசிக்கும் நவீன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு அந்த வாலிபர் வெள்ளக்கல் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் பல வருடமாக வசித்து வருகிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகத்தினர் அங்கு சென்று  அந்த இடத்தில் வசித்து வந்த எங்களை காலி செய்ய என்று கூறியுள்ளனர். அதற்கு நாங்கள் இத்தனை வருடமாக இங்கேயே வசித்து வந்துள்ளோம் திடீரென எங்களை காலி செய்துகொண்டு போக சொன்னால் நாங்கள் எங்கே செல்லுவோம் என்று கேட்டதற்கு அதிகாரிகள் உங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை அதிகாரிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை. அதனால் நாங்கள் அனைவரும் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. ஆகவே நாங்கள் எங்கே சென்று வசிப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறோம் என்றுமிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனால் தான் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சென்ற பொதுமக்களில் சிலரை மட்டுமே கலெக்டரிடம் மனு கொடுப்பதற்கு அனுமதித்துள்ளனர். அந்த வாலிபரின் செயலால் சிறிதுநேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |