பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய புரமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் புதிதாக வந்துள்ள பிரமோவில் ஹேமாவை பார்த்துக்கொள்ள கண்ணம்மாவை தனது வீட்டிற்கு அழைக்கிறார்.
ஆனால் கண்ணம்மாவோ ஹேமாவை எனது வீட்டில் விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் கோபமான பாரதி கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். இந்த பரபரப்பான பிரமோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அடுத்த எபிசோடை காண்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.