Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்றுக்குள்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள பள்ளிகள் மத்திய அரசின் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மத்திய அரசின் ( fit india movement) என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும்.

ஆனால் இதுவரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளை சான்றுக்காக பதிவு செய்துள்ளன. இது ஏற்புடையதல்ல. ஆகவே பதிவு செய்யாத பள்ளிகள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்து சான்றிதழ் கட்டாயம் பெற்றாக வேண்டும். பள்ளிகள் சான்று பெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்து அறிக்கை தரவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |