OPEC மற்றும் அதன் கூட்டு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே டீசல் மற்றும் பெட்ரோலின் விலை 100ஐ எட்டியுள்ளது. இதனால் சரக்கு வாகன கட்டணங்கள் உயர்ந்து காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேறியுள்ளது. இந்த எரிபொருட்கள் விலை அதிகரிப்பினால் பல்வேறு எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வந்துள்ளன. இதனை அடுத்து வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் உற்பத்தியை அதிகரிக்க OPEC நாடுகள் தங்களது ஒத்துழைப்பை நல்க உள்ளன.
இதனை அடுத்து சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு இடையே இருந்த வேறுபாடுகள் நீக்கப்பட்டு அவை எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இதனை தொடர்ந்து OPEC மற்றும் அதன் கூட்டு நாடுகள் தினசரி கச்சா எண்ணெய் 10 மில்லியன் பேரல்களாக குறைத்ததை அடுத்து எரிபொருளின் தேவை அதிகரித்து அவற்றின் விலையேறியது. ஆனால் தற்போது ஏற்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 2 மில்லியன் பேரல்கள் அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.இந்த உற்பத்தியானது ஆகஸ்ட்டில் தொடரப்படும் என்பதால் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அதிகரிக்கப்படும். மேலும் கச்சா எண்ணை உற்பத்தி அதிகரிப்பினால் இந்தியாவில் உள்ள எரிபொருட்களான பெட்ரோல், டீசல், ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.