மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியன் செல்வன் கதையை படமாக்கிவருகிறார் இயக்குநர் மணிரத்னம். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அதோடு இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதனால் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளது. போஸ்டரில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.