Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் பைக்கில் கெத்தாக வரும் தமன்னா… ‘மாஸ்டர் செஃப்’… கலக்கலான புரோமோ…!!!

தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதேபோல் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தமன்னா விஜய் சேதுபதியுடன் பைக்கில் கெத்தாக வந்து இறங்குகிறார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |