Categories
உலக செய்திகள்

13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… தாய் பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள Baton Rouge எனும் பகுதியை சேர்ந்த Alvah Davis ( 46 ) என்பவர் தனது 13 வயது மகனை இரண்டு மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிறுவனின் தாயார் தான் வீட்டில் இல்லாதபோது இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே Davis குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் அந்த சிறுவனுடைய தாயாரின் மற்றொரு மகனான 5 வயது குழந்தைக்கு Davis தான் தந்தை என்றும், அவருக்கு பல வருடங்களாக அந்த குடும்பத்தை தெரியும் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 13 வயது சிறுவனுடன் தடவியல் நேர்காணல்கள் நடந்த பிறகு Davis-ஐ காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |