Categories
சினிமா

தனுஷ் ரசிகர்கள் மீது ஷான் ரோல்டன் வருத்தம்…. என்ன காரணம் தெரியுமா?…..!!!!!

தனுஷ் – ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவான முதல் படம் ‘ப.பாண்டி’. இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திலும் இணைந்து பணிபுரிந்தார்கள். ஆனால், அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.அதற்குப் பிறகு தனுஷ் – ஷான் ரோல்டன் இருவருமே இணைந்து பணிபுரியவில்லை. ஆனால், நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

அவ்வப்போது தனுஷுடன் மீண்டும் இணைந்து பணிபுரியாதீர்கள் என்று ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமன்றி, ஜூலை 17-ம் தேதி தனது தரப்பிலிருந்து பெரிய அறிவிப்பு ஒன்று வரவிருப்பதாகத் தெரிவித்தார் ஷான் ரோல்டன். இந்த ட்வீட்டை முன்வைத்து மீண்டும் தனுஷுடன் பணிபுரியவுள்ளார் என நினைத்து, பலரும் வேண்டாம் என்று தொடர்ச்சியாக ட்வீட் செய்துள்ளனர். இதனால் ஷான் ரோல்டன் கடும் கோபமடைந்துள்ளார்.

.

Categories

Tech |