Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கு குடிநீர் தட்டுப்பாடு…. நடவடிக்கை எடுக்கப்படும்…. அமைச்சரின் தகவல்….!!

விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற 3 நகராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 444 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து எம்.ஏ.சி.எஸ். பூங்காவில் அமைச்சர் ராமச்சந்திரன் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரகுமான், அசோகன், சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா, கடற்கரை ராஜ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் தி.மு.க நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், காங்கிரஸ் நகர தலைவர் ஐயப்பன், ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவு பெறும் நிலையில் சாத்தூர் நகராட்சிக்கு தற்போதைய குடிநீர் தவிர கூடுதலாக 26 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

ஆகவே 2050 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 41,990 நபர்களுக்கு 32.5 லட்சம் குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக 40 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு 13,340 வீடுகளுக்கு குடிநீர் குழாய் புதிய இணைப்பு வழங்கப்படும் என்றும் அனைத்து நகராட்சிக்கும்  திட்ட பணிகளை முறையாக செயல்படுத்தி குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து தமிழகத்திலேயே உங்கள் தொகுதியின் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகம் மனுக்கள் விருதுநகர் மாவட்டத்தில்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. எனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன்பின் விருதுநகர் மருத்துவ கல்லூரியின் கட்டிட பணிகளை விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |