தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை வைத்து இருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் ஜோசப் ராஜ் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணிக்காக சென்ற காவல்துறையினர் ஜோசப் ராஜை கையும் களவுமாக பிடித்து, அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் ஜோசப் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.