டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன், எம்பி கனிமொழி தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முகஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுத்ததாகவும், சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற சொல்லுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories
JUST IN: குடியரசுத் தலைவருடனான சந்திப்பு… முதல்வர் மு க ஸ்டாலின் பேட்டி…!!!
