Categories
உலக செய்திகள்

இனி தொழுகை நேரத்திலும் வியாபாரம் செய்யலாம் …. இளவரசர் அதிரடி அறிவிப்பு ….!!!

தொழுகை  நேரங்களில் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று  இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் வழக்கமாக தொழுகை நடக்கும் நேரங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்து விடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இறை வழிபாட்டுக்காக அனைவரும் முழு கவனத்துடன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மரபு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது .ஆனால் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா  வைரஸ் தொற்று இந்த பாரம்பரிய முறையை  அதிரடியாக மாற்றி உள்ளது. ஏனெனில் தொழுகை நடக்கும் நேரங்களின் போது வியாபாரிகள் கடைகளை அடைப்பதால் பொதுமக்கள் பொருள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் ஏராளமானோர் தொழுகை நேரத்தின் போது கடைகளின் முன்பு நீண்ட நேரம் இருக்கும் நிலை ஏற்படுவதால் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சவுதி அரேபியாவின் இளவரசரான  முகமதுபின் சல்மான் சமூக மாற்றத்திற்கான சில பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார் .அந்த வகையில் தொழுகை நடக்கும் நேரங்களில் வியாபாரிகள் கடையை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையின் காரணமாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |