பிரிட்டன் பிரதமரான, போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தபோவதாக தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனில் தற்போது டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான, சாஜித் ஜாவித் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார்.
எனவே பிரதமர் போரிஸ் ஜான்சனும், நிதியமைச்சர் ரிஷி சுனக் இருவரும் தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிரதமரையும், நிதியமைச்சரையும் சந்தித்தவர்களில் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், பிரிட்டன் சுகாதார அமைப்பு அதனை கண்காணிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.