Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ராட்சத அலைகள் வந்துட்டு…. அதான் யாரும் போகல…. வெறிசோடி காணப்பட்ட மீன்சந்தை….!!

கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரியில சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதேபோன்று கன்னியாகுமரி வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், சிலுவை நகர், கீழமணக்குடி, பள்ளம் போன்ற பல்வேறு  கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ள வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுவிட்டு காலை 8 மணிக்கு கரை திரும்புவர்.

இந்நிலையில் கன்னியாகுமரி, கோவளம் பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டு ராட்சத அலைகள் பாறையின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கோவளத்தில் இருக்கின்ற 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கடற்கரையின் மேடான பகுதியில் பாதுகாப்பாக வைத்தனர். இவ்வாறு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்ததால் கோவளம் மீன்சந்தை சந்தை மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. ஆனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சார்ந்த விசைப்படகுகளில் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

Categories

Tech |