இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதனிடையே காயம் காரணமாக கேப்டன் குசல் பெரேரா தொடரில் இருந்து விலகியதால் ,இலங்கை அணியின் புதிய கேப்டனாக ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையின் போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு இலங்கை அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அணியின் முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.இதற்கு முன்பு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியாதல் டிக்வெல்லா, குணதிலகா மற்றும் குசல்மென்டிஸ் ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டனர். அதோடு ஊதிய விவகாரத்தால் அணியின் ஆல்ரவுண்டரான மேத்யூசும் விலகியுள்ளார். இதனால் இலங்கை அணியின் நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது . இதனால் இந்திய அணியே போட்டியை வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.