இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது .
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதே நேரத்தில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் மற்றும் சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.இந்த போட்டியில் பங்கேற்க உள்ள இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:
இந்திய அணி :
ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி அல்லது தீபக் சாஹர், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது ராகுல் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணி :
அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா.