கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் உருவானது . இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சில காரணங்களால் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது.
இந்நிலையில் நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது கார்த்திக் நரேன் தனுஷின் ‘D43’ படத்தை இயக்கி வருகிறார்.