Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதார செயலர் கூறிய தகவல்.. அமைச்சரவையில் உண்டான சிக்கல்..!!

பிரிட்டனில் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அமைச்சரவையில் இருக்கும் முக்கால்வாசி பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

பிரிட்டனில் சஜித் ஜாவித்(51) புதிய சுகாதார செயலாளராக சில நாட்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டதனால் சிறிய அறிகுறிகள் தான் தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

எனவே அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த தகவல் கண்டறியப்பட்டது. அதன்பின்பு அவர்களிடம் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதாவது நாட்டில் ஜூலை 19 ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சரவையில் அதிக நபர்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டு மக்களுக்கு தளர்வுகள் தொடர்பில் பிரதமர் அறிவிக்கப்போகும் அந்த நாளில் அவர் தனிமைப்படுத்திக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |