ஸியோமி உலகளாவிய வர்த்தகத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனை சந்தையில் 19 சதவீதத்துடன் முதல் இடத்திலும், சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஸியோமி நிறுவனம் 17 சதவீதத்துடன் 2-ஆவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனம் 14 சதவீத வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்திலும், விவோ மற்றும் ஓப்போ நிறுவனங்கள் அதற்கு அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் ஸியோமி நிறுவனம் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்கள் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.
அதிலும் கேனலிஸ் ஆராய்ச்சி மேலாளர் பென் ஸ்டாண்டன், ஸியோமி நிறுவனம் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்கள் 300 சதவீதம் லத்தீன் அமெரிக்காவிலும், 150 சதவீதம் ஆப்பிரிக்காவிலும், 50 சதவீதத்திற்கு மேற்கு ஐரோப்பாவிலும் வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஜியோமி ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் விலையை விட குறைவு என்பதால் அதனை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ஸியோமியின் முதன்மை தயாரிப்புகளான M 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முதலிடத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தையும் ஸியோமி பின்னுக்கு தள்ள தயாராகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.